சிம்மம் ராசிக்கு பொருத்தமான ராசி எது ?Which Is The Best Marraiage Matching Rasi For Simmam rasi

திருமணம் பொருத்தம் 

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது 


பொருத்தம் அவசியம் பார்க்கவேண்டுமா ?
திருமணப் பொருத்தம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் திருமணம் 
சொர்க்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது .
நாம் பிறக்கும்போதே இவருக்கு இவர் மனைவி இவருக்கு இவர் கணவன் என்பதை அந்த ஆண்டவனே எழுதி விடுகிறான்.
 ஒரு கணவனை விட மனைவி வயதில் சில ஆண்டுகளாவது இளையவளாகத்தான்  இருக்கிறாள்.
 ஒரு கணவன் இந்த பூமியில் பிறக்கும் போது மனைவியும் பிறப்பது இல்லை என்றாலும் அந்தக் கடவுள் , இந்த கணவன் பிறக்கும் போதே அவனுக்கு இந்த ஊரில் பிறக்க போகும் பெண்ணே மனைவியாக வருவாள் என்பதை எழுதி விடுகிறான்.
 மலைகளையும் கடலையும் உப்புக்கும் முடிச்சு போடுபவன் ஆண்டவன்.
 அடுத்த வீட்டில் பெண்ணை வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக தன் மகனுக்கு ஊரெல்லாம் பெண் தேடி சுற்றி அலையும் பெற்றோர் தன் மகனுக்கு திருமண வயது வரும்போது அடுத்த வீட்டு பகையும் மறந்து அந்தப் பெண்ணையே மருமகளாக ஏற்றுக் கொள்வர் .
 அழகில்லாத அந்த மருமகள் கூட திருமண வயது வரும்போது ரதியாக கண்ணுக்குத் தெரிவார்.
 வரதட்சணை யோகமோ அல்லது அழகு அங்கு ஒரு தடையாக இருப்பதில்லை.
 அன்பும் அறனும் உடைத்தாயின் வாழ்க்கை ஒருவருக்கு அமைய வேண்டுமானால் ,கணவன்-மனைவி இருவருடைய ஜாதகத்திற்குமிடையே பொருத்தங்களும் சரியாக அமைய வேண்டும்.
 குறிப்பாக ராசி பொருத்தம் ஆண் பெண் வசியம் பொருந்தி வந்தால் மற்றும் மற்ற பொருத்தங்களையும் ஒருவாராக பார்த்து முடிவு செய்து அதை திருமணத்தை நடத்தலாம்.
   திருமணத்திற்குப் பின்னர் நிலைத்த சந்தோஷத்தோடு வாழ வேண்டுமானால் திருமணம் செய்யும்  முன்னர் பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியமாகும் .
சிம்மம் ராசி காரர்களுக்கு பொருத்தம் எவ்வாறு அமையும்.
  சிம்மம் ராசிக்கு திருமணம் பொருத்தமான ராசி எது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
 பொதுவாக திருமணத்திற்காக வரன் தேடிக் கொண்டிருப்பவர்கள் தன்னுடைய ராசிக்கு எந்த ராசி பொருத்தமாக அமையும்.
 வாழ்க்கையில் இணக்கமாகவும் விட்டுக் கொடுத்தும் குடும்பத்தை அனுசரித்து செல்லுவார்கள் ,அதற்கு தக்க வகையில் வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்று வரன் தேடும் ஜாதகருக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு கண்டிப்பாக உண்டு.
 இதை அறிந்துசெயல்படுவோம்  என்றால் தன்னுடைய ராசிக்கு பொருத்தமான ராசி எது என்று அறிந்து திருமணம் செய்து வைத்தோம் ஆனால் அந்த வாழ்க்கை இனிதாகவும் சுவையாகவும்  விட்டுக்கொடுத்து குடும்பத்தை அனுசரித்தும் போகிற அளவுக்கு செயல்பாடுகள் அமைந்திருக்கும்.
 ஆகையால் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கு எந்த ராசி பொருத்தமாக அமையும் என்று பார்க்க வேண்டும் .
அதுமட்டுமல்ல மற்ற பொருத்தத்தையும் ராசி கட்டங்களையும் ஆராய்ந்து பொருத்தத்தை சேர்க்க வேண்டும்.



சிம்மம் 

 அதன்படி ராசி மண்டலத்தின் ஐந்தாம் ராசியாகிய சிம்மம் ராசிக்கு பொருத்தமான ராசி என்று பார்த்தோமானால். 
 சிம்மராசி பொருத்தவரை அதிகாரம் மிக்கவர்கள் அடுத்தவர்கள் தனது பேச்சை கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்புகள் மற்றும் தன்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்கள்.
 இந்த அமைப்பைப் பெற்ற சிம்மராசிக்காரர்களுக்கு எவ்வாறு பொருத்தமான ராசி தேர்ந்தெடுப்பது எந்த ராசி பொருத்தமாக அமையும் என்று பார்த்தோமானால் ,
 சிம்மராசி ஆணுக்கு மற்றும் பெண்ணுக்கும் கும்பம் ராசி ஆண் மற்றும் பெண்
பொருத்தமாகும் .
சிம்ம ராசி ஆணுக்கு கன்னி ராசி பெண் பொருத்தமாகும்.
  சிம்ம ராசி ஆணுக்கு துலாம் ராசி பெண் பொருத்தமாகும் .
சிம்ம ராசி ஆணுக்கு விருச்சகம் ராசி பெண் பொருத்தமாகும்
 சிம்ம ராசி பெண்ணுக்கு தனுசு ராசி ஆண் பொருத்தம் ஆகும்.
   சிம்ம ராசி ஆணுக்கு மீனம் ராசி பெண் பொருத்தமாகும்.
    பொதுவாக சிம்ம ராசி காரர்களுக்கு மேஷம் ராசி என்பது கச்சிதமாக பொருந்தும். ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
    சிம்ம ராசி பெண்ணுக்கு ரிஷபம் ராசி ஆண் பொருத்தமாகும்.
    சிம்ம ராசி பெண்ணுக்கு மிதுனம் ராசி ஆண் பொருத்தமாகும்.
    சிம்ம ராசி பெண்ணுக்கு கடகம் ராசி ஆண் பொருத்தமாகும் .
இவ்வாறு பார்க்கும்போது ஒருவருடைய ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு 6 8 12 போன்ற இடங்களில் இல்லாதிருப்பது உத்தமமாக இருக்கும்.
 மேற்கண்ட ராசியில் சில 6 போன்ற அமைப்பு காணப்பட்டாலும் அதனால் எந்த தடையும் கிடையாது

இதைப் பார்த்துக் கொண்டும் மற்ற ராசி கட்டங்களில் பொருத்தங்களையும் பார்த்து முடிவு செய்து திருமணம் செய்வது நன்மையை கொடுக்கும் இல்லறம் இனிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *