திருமண பொருத்தம்
மேஷம் ராசிக்கு பொருத்தமாகும் ராசிகள்
மேஷம் ராசிக்கு திருமணம் பொருத்தமான ராசி எது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
பொதுவாக திருமணத்திற்காக வரன் தேடிக் கொண்டிருப்பவர்கள் தன்னுடைய ராசிக்கு எந்த ராசி பொருத்தமாக அமையும் வாழ்க்கையில் இணக்கமாகவும் விட்டுக் கொடுத்தும் குடும்பத்தை அனுசரித்து செல்லுவார்கள் .
அதற்கு தக்க வகையில் வாழ்க்கை துணை அமைய வேண்டும், என்று வரன் தேடும் ஜாதகருக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு கண்டிப்பாக உண்டு,
இதை அறிந்து செயல்பட்டோமென்றால் தன்னுடைய ராசிக்கு பொருத்தமான ராசி எது என்று அறிந்து திருமணம் செய்து வைத்தோம் ஆனால் அந்த வாழ்க்கை இனிதாகவும் சுவையாகவும் எனக்கும் விட்டுக்கொடுத்து குடும்பத்தை அனுசரித்தும் போகிற அளவுக்கு செயல்பாடுகள் அமைந்திருக்கும்.
ஆகையால் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கு எந்த ராசி பொருத்தமாக அமையும் என்று பார்க்க வேண்டும்.
அதுமட்டுமல்ல மற்ற பொருத்தத்தையும் ராசி கட்டங்களையும் ஆராய்ந்து பொருத்தத்தை சேர்க்க வேண்டும்.
மேஷம்
அதன்படி ராசி மண்டலத்தின் முதல் ராசியாகிய மேஷம் ராசிக்கு பொருத்தமான ராசி என்று பார்த்தோமானால்.
மேஷம் ராசி பெண்ணுக்கு சிம்மம் ராசி, தனுசு ராசி ,ஆண்கள் பொருத்தமாக அமையும்.
மேஷம் ராசி பெண் மற்றும் ஆணுக்கு துலாம் ராசி பொருத்தமாக அமையும்.
மேஷம் ராசி ஆணுக்கு கடகம் ராசி, சிம்மம் ராசி ,துலாம் ராசி ,விருச்சிகம் ராசி உடைய பெண் பொருத்தமாக அமையும் .
மேஷம் ராசி பெண்ணுக்கு தனுசு ராசி ,மகரம் ராசி ,மீனம் ராசி ஆண்கள் பொருத்தமாக அமையும் .
மேஷம் ராசி ஆணுக்கு ரிஷபம் ராசி ,மிதுனம் ராசி பெண்கள் பொருத்தமாக அமையும்.
இதுமட்டுமல்லாமல் ராசி கட்டத்தில் பொருத்தமான ராசி இணைக்கும் பொழுது 6 8 12 போன்ற இடங்களில் பார்த்து அமைப்பது நன்று