திருமணம் பொருத்தம்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது
பொருத்தம் பார்ப்பது அவசியமா ?
திருமணப் பொருத்தம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் சொர்க்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது .
நாம் பிறக்கும்போதே இவருக்கு இவர் மனைவி இவருக்கு இவர் கணவன் என்பதை அந்த ஆண்டவனே எழுதி விடுகிறான் .
ஒரு கணவனை விட மனைவி வயதில் சில ஆண்டுகளாவது இளையவளாகத்தான் இருக்கிறாள்.
ஒரு கணவன் இந்த பூமியில் பிறக்கும் போது மனைவியும் பிறப்பது இல்லை என்றாலும் அந்தக் கடவுளின் இந்த கணவன் பிறக்கும் போதே அவனுக்கு இந்த ஊரில் பிறக்க போகும் பெண்ணே மனைவியாக வருவாள் என்பதை எழுதி விடுகிறான் .
மலைகளையும் கடலையும் உப்புக்கும் முடிச்சு போடுபவன் ஆண்டவன்.
அடுத்த வீட்டில் பெண்ணை வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக தன் மகனுக்கு ஊரெல்லாம் பெண் தேடி சுற்றி அலையும், பெற்றோர் தன் மகனுக்கு திருமண வயது வரும்போது அடுத்த வீட்டு பகையும் மறந்து அந்தப் பெண்ணையே மருமகளாக ஏற்றுக் கொள்வார்.
அழகில்லாத அந்த மருமகள் கூட திருமண வயது வரும்போது ரதியாக கண்ணுக்குத் தெரிவார் .
வரதட்சணை அல்லது அழகு அங்கு ஒரு தடையாக இருப்பதில்லை. அன்பும் அறனும் உடைத்தாயின் வாழ்க்கை ஒருவருக்கு அமைய வேண்டுமானால் கணவன்-மனைவி இருவருடைய ஜாதகத்திற்கிடையே இருவரின் பொருத்தங்களும் சரியாக அமைய வேண்டும்.
குறிப்பாக ராசி பொருத்தம் ஆண் பெண் வசியம் பொருந்தி வந்தால் மற்றும் மற்ற பொருத்தங்களையும் ஒருவாராக பார்த்து முடிவு செய்து அதை திருமணத்தை நடத்தலாம்.
திருமணத்திற்குப் பின்னர் நிலைத்த சந்தோஷத்தோடு வாழ வேண்டுமானால் திருமணம் செய்யும் முன்னர் பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியமாகும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசி காரர்களுக்கு பொருத்தம் எவ்வாறு அமையும்.
விருச்சிகம் ராசிக்கு திருமணம் பொருத்தமான ராசி எது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
பொதுவாக திருமணத்திற்காக வரன் தேடிக் கொண்டிருப்பவர்கள் தன்னுடைய ராசிக்கு எந்த ராசி பொருத்தமாக அமையும் வாழ்க்கையில் இணக்கமாகவும் விட்டுக் கொடுத்தும் குடும்பத்தை அனுசரித்து செல்லுவார்கள், அதற்கு தக்க வகையில் வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்று வரன் தேடும் ஜாதகருக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு கண்டிப்பாக உண்டு.
இதை அறிந்து செயல்படும் என்றால் தன்னுடைய ராசிக்கு பொருத்தமான ராசி எது என்று அறிந்து திருமணம் செய்து வைத்தோம் ஆனால் அந்த வாழ்க்கை இனிதாகவும் சுவையாகவும் எனக்கும் விட்டுக்கொடுத்து குடும்பத்தை அனுசரித்தும் போகிற அளவுக்கு செயல்பாடுகள் அமைந்திருக்கும்.
ஆகையால் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கு எந்த ராசி பொருத்தமாக அமையும் என்று பார்க்க வேண்டும் ,
அதுமட்டுமல்ல மற்ற பொருத்தத்தையும் ராசி கட்டங்களையும் ஆராய்ந்து பொருத்தத்தை சேர்க்க வேண்டும்.
அதன்படி ராசி மண்டலத்தின் எட்டாம் ராசியாகிய விருச்சிகம் ராசிக்கு பொருத்தமான ராசி என்று பார்த்தோமானால்.
குடும்பத்தின் மேல் பாசமும் அன்பும் குழந்தைகளின் மேல் அதிகளவு பாசமும் உற்றார் உறவினர்களை மதித்து தனக்கு சரி என்று பட்டதை நேர்மையாகவும் தவறு என்று பட்டதை சுருக் என்றும் சொல்லக்கூடிய விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருமண பொருத்தம் ராசிபலன் என்பதை பார்ப்போம்
விருச்சிகம்ராசி பெண்ணுக்கு ரிஷபம் ராசி ஆண் பொருத்தமாகும்.
விருச்சகம் ராசி பெண்ணுக்கு மேஷம் ராசி ஆண் பொருத்தம் ஆகும்
விருச்சிகம் ராசி ஆணுக்கு மீனம் ராசி பெண் பொருத்தமாகும்.
விருச்சகம் ராசி ஆணுக்கு தனுசு ராசி பெண் பொருத்தமாகும் .
விருச்சிகம் ராசி பெண்ணுக்கு தனுசு ராசி ஆண் பொருத்தமாகும்
இருந்தாலும் இருவருக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் உருவாகலாம்.
விருச்சகம் ராசி ஆணுக்கு மகரம் ராசி பெண் பொருத்தமாகும்.
விருச்சகம் ராசி பெண்ணுக்கு மிதுனம்ராசி பொருத்தக்கூடாது
விருச்சகம் ராசி ஆண் பெண் இருபாலருக்கும் கடகம் ராசி ஆண் பெண் இருபாலரும் பொருந்தி வரும் .
விருச்சிகம் ராசிக்கு சிம்மம் ராசி ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
விருச்சகம் ராசி பெண்ணுக்கு கன்னி ராசி ஆண் துலாம் ராசி ஆண் பொருந்தி வரும்.
விருச்சகம் ராசி ஆணுக்கு துலாம் ராசி பெண் பொருந்தக் கூடாது.
மேற்கண்ட 6 8 12 போன்ற இடங்களை இருக்கும் ராசிகளை இணைப்பது கூடாது ,
மேலும் சில இடங்களில் 6 12 போன்றவை பொருத்தமாகவே அமைகின்றது.
மேற்கூறிய வசிய பொருத்தம் ராசி ப் பொருத்தம் பார்த்து மற்ற பாவக ராசிக் கட்டங்களை ஆராய்ந்து திருமண பொருத்தம் செய்வது நன்மையாக இருக்கும் வாழ்வில் வசந்தம் கூடும்,