HAPPY CHRISTMAS
JESUS CHIRIST
BIRTH STORY
இயேசுவின் பிறப்பு
Happy Chiristmas
இயேசுக்கிறிஸ்து இப்பூவுலகில் அவதரித்த நிகழ்வுகள், மார்கழி மாதம் என்று சொன்னாலே தேவர்களுக்கு உகந்த மாதம் என்று சொல்லலாம் மாதமோ மார்கழி மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம் என்று நாம் படித்திருப்போம் கேட்டிருப்போம் .
அத்தகைய மார்கழி மாதத்தில் மார்கழி மாதமே மனித நேயத்தை கடவுளாக ஒரு மனிதனாக பூமிக்கு வந்த சிறப்பான நாள் தான் கிறிஸ்துமஸ் எனவும் இயேசு கிறிஸ்து பிறந்த தினமாகவும் இதை உலக மக்கள் அனைவரும் கிறிஸ்து பிறப்பு கிறிஸ்துமஸ் பெரு விழாவாகவும் கொண்டாடுகிறார்கள்.
Christmas is the feast day when Jesus Christ came into the world. It is celebrated by all the people of the world.
இயேசு கிறிஸ்து இவ்வுலகில் அவதரித்த இந்த திருநாளை கிறிஸ்மஸ் திருநாள். உலகில் வாழும் அனைத்து மக்களும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் முக்கிய நோக்கம் என்னவெனில் ஈகை குணம் அடுத்தவர்களுக்கு உதவி செய்து வாழ்தல் என்ற பெரிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
தன்னிடம் இருக்கும் பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுத்து அவர்கள் மகிழ்ச்சி அடைவதே பெருவிழாவின் கிறிஸ்துமஸ் தினத்தின் நோக்கம் அதாவது இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சியான தருணம் கிறிஸ்மஸ் பெருவிழா .'
குறிப்பாக கிறிஸ்மஸ் தாத்தா என்று குழந்தைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு கிறிஸ்மஸ் தாத்தாவிடம் பரிசு பெற்று சந்தோஷம் அடைகிறார்கள்.
இயேசு கிறிஸ்து பிறந்து ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அந்தக் காலகட்டத்தில் இயேசு பிறந்த அந்த நேரத்தில் அந்த சமயத்தில் இருக்கும் நிகழ்வுகளை இப்பொழுது பார்ப்போம்.
குறிப்பாக கிறிஸ்துமஸ் பெருவிழா, இனமொழி ஜாதி மதம் வேற்றுமைகளைக் கடந்து உலகம் முழுவதும் அன்புக்குரிய விழாவாக கிறிஸ்துமஸ் பெருவிழா அனுசரிக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் இந்தப் பிறப்பு எந்த வகையில் நிகழ்ந்தது என்பதை ஒரு கதையாகவே பார்ப்போமே, நாசரேத்தில் உள்ள ஒரு பட்டணத்தில் கன்னி மரியாளுக்கும் யோசபிற்கும் திருமணத்திற்கான ஒப்பந்தங்கள் நிறைவேறியது.
அந்த சமயத்தில் கடவுளின் தூதர் கபிரியேல் என்பவர் மரியாளின் முன் தோன்றி "அருள் நிறைந்த மரியே வாழ்க பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்று சொன்னார் ,அரைத்தூக்கத்தில் இருந்த கன்னி மரியாளுக்கு இந்த வாசகங்கள் திடீர் அறிவிப்புகள் மரியாளின் மனதில் ஒரு கலக்கத்தை உண்டாக்கியது
உடனே அந்த தூதர் பயப்படாதே மரியாளே நீர் உன்னதமானவர், ஆண்டவரின் பரிபூர்ண அன்பையும் அருளையும் நீர் பெற்றுள்ளீர் , திருமணத்துக்கு முன்பாகவே ஆண்டவரின் கிருபையால் அதிசய குழந்தையை நீ பெற்றெடுப்பாய் , அந்த குழந்தைக்கு இயேசு என்று பெயரிடு வீர்.
அந்தக் குழந்தையை ஆண்டவரின் குழந்தை இந்த உலகை மீட்க வந்தவரும் இந்த உலகை ஆளப்போகும் இறைமகன் அவர்தான் அவர்களின் ஆட்சிக்கு முடிவு இல்லை என்றும் கூறினார்.
மரியாளுக்கு ஒரு சந்தேகம் வந்தது தூதரை நோக்கி வினா எழுப்பினார்,தூதரே இது எப்படி நிகழும் நான் கன்னியாக இருக்கிறேனே என்றார், அதற்கு அந்த தூதர் ஆண்டவரின் வல்லமை உம்மீது நிழலாக இறங்கும் உனக்குப் பிறக்கும் குழந்தை தூய்மையானவர் ஆண்டவரின் புதல்வர் என்றார் கபிரியேல்.
இதை ஏற்றுக்கொண்ட மரியாள் அவரைத் துதித்து நான் ஆண்டவரின் அடிமை உமது வாக்குப்படியே எல்லாம் நிகழட்டும் அமையட்டும் என்றார் மரியாள். உடனே அந்த தேவதூதர் அங்கிருந்து மறைந்து சென்றார் .
திருமணத்துக்கு முன்பாகவே மரியாள் கருவுற்றிருப்பது திருமணம் செய்யப்போகும் யோசேப்புக்கு தெரியவந்தது, உடனே யோசேப்பு இந்த திருமணத்திலிருந்து விலகிவிடலாம் இந்த திருமணம் பற்றி பலவித குழப்ப நிலைகளிலும் இருந்தார்.
இந்த சமயத்தில் யோசேப்பு தனிமையில் இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கையில் வானதூதர் ஆன இறைத்தூதர் காப்ரியல் யோசேப்பின் கனவில் வந்தார்,
தாவீதின் மகனே மரியாவை ஏற்றுக்கொள்ள நீங்கள் பயப்பட வேண்டாம் அவள் கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான் ஏனெனில் அவர் தம் மக்களை பாவங்களில் இருந்து மீட்டெடுக்க இப்படி செய்து இருக்கிறார் என்றார். உடனே யோசேப்புக்கு உண்மை புரிந்தது அதை சொன்ன தூதரை வணங்கி மரியாளை நான் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் ஏற்றுக் கொண்டார் .
மக்கள் தொகை முதல் கணக்கெடுப்பு
அந்த காலகட்டத்தில் அந்த நாட்டை ஆண்ட மன்னர் அகஸ்டஸ் சீசர் முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்புநிகழ்ந்தது உலகத்திலேயே அவர்தான் கொண்டு வந்தார் ,ஆகையால் நாட்டு மக்களை எவ்வளவு இருக்கிறார்கள் என்பது பற்றி கணக்கெடுக்க கட்டளையும் இட்டார்.
யோசேப்பும் மரியாளும் அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக தன் பெயரை பதிவு செய்ய யோசேப்பும் மரியாளும் யூதேயாவிலுள்ள பெத்தலகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார்கள் .
அந்த நேரம் மரியாவுக்கு பேறுகாலம் வந்துவிட்டது போகிற இடமெல்லாம் தங்குவதற்கு இடம் தேடிக் கொண்டிருந்தனர் ஆனால் எந்த இடத்திலும் தங்குவதற்கு விடுதிகள் இடம் கிடைக்கவில்லை .
இயேசு பிறந்தார்
ஒருவர் மட்டும் மனமுவந்து வந்து தன்னுடைய மாட்டுத்தொழுவத்தில் தங்கிக் கொள்ளுங்கள் ஒரு பக்கத்தில் என்று சொன்னார் .அங்கே தான் அதிசயம் நிகழ்ந்தது அந்த மாட்டுத்தொழுவத்தில் உலகின் பாவங்களை போக்கும் இறைவன் அருளிய தெய்வக் மகனை பெற்றெடுத்தாள் கன்னிமரியாள்.
அந்த காலத்தில் வான சாஸ்திரிகள் மற்றும் எதிர்காலத்தைக் கணித்துக் கூறுபவர்கள் இறை மகன் பிறந்திருக்கிறார் இந்த இறைமகனால் ஆட்சிக்கு ஆபத்து அவரே இவ்வுலகை ஆழ்வார் என்றெல்லாம் கூறினார்கள்.
ஏரோது மன்னன்
இதனால் ஏரோது அரசன் கலங்கினான் அந்த காலகட்டத்தில் பிறந்த ஆண் குழந்தைகள் அத்தனையும் கொன்று குவித்தான் அதுமட்டுமல்ல எருசலேம் முழுவதும் கலக்கமும் வேதனைகளும் நிரம்பியதாக இருந்தது என்று பைபிள் கூறுகிறது.
அதாவது ஆளும் வர்க்கத்தினர் அடிப்படையே கிறிஸ்துவின் வருகையால் ஆட்டம் கண்டது என்று சொல்லலாம் .ஒரு தெய்வக்குழந்தை மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் அனைத்து வசதிகளும் நிரம்பிய ஆடம்பரமாக ஒரு அமைப்பில் பிறந்திருக்கலாம் ,ஆனால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் மனிதர்களை அந்த கஷ்டத்தில் இருந்து மீட்டு பாவத்திலிருந்து விமோசனம் கொடுப்பதற்காக சாதாரண மாட்டுத்தொழுவத்தில் இறைமகன் இயேசு கிறிஸ்து பிறந்தார்.
பிறக்கும்போதே உலகத்தில் மாற்றங்களை பண்ணினார் இதனால் சிறிய பட்டணம் ஆகிய பெத்தலேகம் திடீரென்று அதிக புகழ் பெற்றது அன்றைய காலகட்டத்தில் அநேகர் பெத்தலேகம் போனார்கள்.
இப்படிப் பல்வேறு பகுதிகளில் இருந்து பெத்தலேகம் சென்ற யாருமே அங்கு தங்க முடியவில்லை அங்கிருந்து திரும்பவும் சென்றார்கள் கிறிஸ்துமஸ் என்பது பெத்லகேம் போய் வருவது என்பது மிகச் சிறப்பு .
டிசம்பர் 25
டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது என்றால் ரோமாபுரியின் பேரரசன் அரேலியஸ் கிரேக்கத்தின் கடவுள்களில் ஒருவரான சூரிய கடவுளுக்கு கிபி 274 ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கீழ் இருந்த அனைத்து நாடுகளிலும் ஒரு விழா எடுக்க கட்டளையிட்டான் அந்த விழாவை டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாட வேண்டுமென்றும் கட்டளையிட்டான் .
ஆனால் பரலோக பிதாவாகிய கடவுளைத் தவிர வேறு கடவுளை வழிபட விரும்பாத கிறிஸ்தவர்கள் ரோமாபுரியின் கிரேக்க ஆடம்பர மோகத்தில் இருந்து தற்காத்து பின்னாளில் உலகத்துக்கெல்லாம் கிறிஸ்துவ தலைமைப் பீடமாக திருச்சபையாக மலர்ந்தது .
கிறிஸ்து பிறப்பு விழாவும் இதே நாளில் கொண்டாட ஆணையும் பிறப்பிக்கப்பட்டது இது ஒருபுறம் சொல்லப்பட்டாலும் இயேசுவின் சீடர்கள் எழுதி வைத்ததில் இருந்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் டிசம்பர் 25ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவாக அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர்.
கிறிஸ்து பிறப்பின் நோக்கம் உலக மக்கள் அனைவரையும் வாழ்வில் அன்பும் சமாதானமும் உண்டாகட்டும் என்பதாகும்.
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்
கவிஞர் மங்களம் ஸ்டீபன்
0 Comments