2025 புத்தாண்டு ராசி பலன் கும்பம் ராசி /2025 New Year Rasi Palan Kumbam Rasi

2025 New Year Rasi Palan Kumbam Rasi

ஹாய் பிரண்ட்ஸ் நான்தான் உங்க ஜோதிடர் ஜெயகுமார் பேசுறேன் அனைவருக்கும் 2025 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அனைவரும் தெளிவான மனநிலையோடு எடுத்த காரியங்களில் வெற்றியும் தடை தாமதங்கள் இல்லாமல் செல்வ வளங்களோடு உற்றார்  உறவினரோடு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக சந்தோஷமாக நோய் நொடி இல்லாத வாழ்க்கையை மேற்கொண்டு வாழ வேண்டுமென்று எல்லாம் வல்ல .இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் .

கும்பம் ராசி 2025 பொது பலன் 

இந்த 2025 ஆம் ஆண்டு கும்பம் ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட  பலன்களை கொடுக்கப்போகுது 2025 வருடம் என்று பார்ப்போம். குறிப்பாக கும்பம் ராசி என்று  எடுத்துக்கொண்டால் கால புருஷ தத்துவத்தின்படி கும்பம் ராசி 11 ஆம் இடம் லாபங்கள் நன்மைகள் ஆசை அபிலாஷைகள் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு நல்ல இடம்.

 சனியின் ஆட்சி வீடாகக் கொண்ட கும்பம் ராசிக்கு இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுடைய ராசிநாதனாகிய சனி பகவான்  இரண்டாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார் அதேபோல உங்களுடைய இரண்டாம் இடத்தின் அதிபதி குருபகவான் உங்களுக்கு ஐந்தாம் இடத்திற்கும் ராகு பகவான் இரண்டாம் இடத்திலிருந்து  உங்களுடைய ஜென்ம ராசிக்கும் கேது பகவான் உங்களுடைய ராசியிலிருந்து எட்டாம் இடமான கன்னி ராசியிலிருந்து ஏழாம்  இடத்திற்குவருகிறார் .

முக்கியமான நிகழ்வுகள்  முக்கியமான பெயர்ச்சிகள் என்று சொன்னால் சனி பெயர்ச்சி குரு பெயற்சி ராகு கேது பெயற்சி ஆகும் .

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த 2025 ஆம்  ஆண்டு உங்களுடைய ராசிநாதனாகிய ஆகிய சனி பகவான் இதுவரைக்கும் ஏழரை சனி என்று  உங்களுடைய ஜென்மத்திலே இருந்து படாத பாடுபடுத்திக் கொண்டிருந்த நிகழ்வுகள் மாறப்போகிறது.

சனி பெயர்ச்சி,குரு பெயர்ச்சி .

 வெற்றிகள் அடையப்  போகிறீர்கள் தனவரவு பொருள்வரவு சிறப்பாக இருக்கும் எண்ணிய காரியங்கள் எண்ணியபடி நடக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகள் நடக்கிறதுக்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.

 திருமணம் கைகூடும் நீண்ட நாட்களாக  திருமணம் ஆகி குழந்தைச் செல்வம் இல்லை என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான பரிகாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் மருத்துவம் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கும் இது ஒரு பொன்னான காலம்  குழந்தைச் செல்வம் பெற்றெடுக்கும் வாய்ப்பு சிறப்பாகவே இருக்கிறது ஏன் என்று சொன்னால் குருபகவான் ஐந்தாம் இடத்திலிருந்து உங்களுடைய ராசியை பார்க்கிறார்.

 கும்பம் ராசியை பார்க்கிறார் மனது தெளிவடையுங்க நம்ம கூட ஒருத்தர் ஃபுல் சப்போர்ட் பண்றதுக்கு ஒருத்தர் இருக்கார் அப்படின்னா நம்ம மனசு எப்படி இருக்கும்எடுக்கிற செயல்பாடுகள் எப்படி இருக்கும் அனைத்தும் வெற்றிகள் தான் கவலையே படாதீங்க.

 ஜென்மச்சனி ஆதிக்கம் விலகி இப்பொழுது பாதச்சனியாக மாறுகிறது ஒரு பெரிய வெயிட்டு தலையில தாங்கலாம் கால்ல கூட அந்த ஃபுட்பால் மாதிரி எட்டி உதைச்சிட்டு போலாம் ஆனா நெஞ்சு மேல எவ்வளவு பெரிய வெயிட்டை நம்ம தாங்க முடியுமா, அதனாலதான் இதுவரைக்கும் ரொம்ப கஷ்டத்துல இருந்த கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த ஒரு பொன்னான வாய்ப்பை இந்த 2025 ஆங்கில புத்தாண்டு இந்த வருடம் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப் போகுது.

 இரண்டாம் இடத்து சனி பகவான் உங்களுக்கு நல்ல ஒரு நன்மைகளை கொடுக்கப் போறாரு லாபங்களை கொடுக்கப் போறாரு சொன்ன சொல்லை செயலாக்கிக் காட்டக்கூடிய ஒரு வல்லமையை கொடுக்கப் போறாரு அப்படின்னு சொல்லலாம், குடும்பத்துல ஒரு இணக்கம் இல்லாத சூழ்நிலை போயிட்டு இருந்தது இது எல்லாமே மாறப்போகுதுங்க கணவன் மனைவி இடையே நல்ல ஒரு புரிந்துணர்வு சந்தோஷம் மகிழ்ச்சி ஆனால் நீங்க செய்ய வேண்டியது பேசும் வார்த்தைகளில்கவனமாகவும் அன்பாகவும் பேசி வந்தீர்களானால் நீங்கள் எடுக்கின்ற  அனைத்து  காரியங்களுக்கும் குடும்பத்தில் உள்ளவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

 தெளிவான மனநிலையோடு குருவின் பார்வை பெற்ற ராசியாகிய கும்பம் ராசி எடுத்த செயல்களில் எடுத்த காரியங்களில் அனைத்தும் வெற்றிகள் கிடைக்கும் நல்ல ஒரு சப்போர்ட் கிடைக்கும் பெரிய மனிதர்களின் சகவாசம்  கிடைக்கும். உயர்  அதிகாரிகளின் அன்பான பார்வை உங்களுக்கு கிடைக்கும் இது  நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து உங்களுக்கு நடக்கப்போகுது அப்படின்னு சொல்லலாம்.

 ராகு கேது பெயர்ச்சி

 ராகு கேது பெயர்ச்சி அப்படின்னு பார்த்தீங்கன்னா ராகு பகவான் இதுவரைக்கும் இரண்டாம்  இடத்திலிருந்து மீனம் ராசியில இருந்த ராகு பகவான் இப்பொழுது உங்களுடைய ராசியாகிய கும்பம் ராசிக்கு வந்து

அமர்கிறார் சோ உங்களுடைய எண்ணங்கள் எல்லாமே அதிகமாக இருக்கும் அதிகப்படியாக இருக்கும் பிரம்மாண்டமாக இருக்கும் எது செய்தாலும் பார்த்தீங்கன்னா சின்னதா செய்யக்கூடாது பெருசா செய்யணும் அப்படிங்கிற எண்ணத்தை அந்த ராகு உங்களுக்கு விதைப்பார்.

 அந்த விஷயங்களில் சற்று கூடுதல் கவனமாக வைத்துக் கொள்வது நல்லது ஒரு சிறிய காரியத்துக்காக சிறிய விலை கொடுத்து வாங்கக்கூடிய ஒரு பொருள் இந்த காலகட்டத்தில் அதிகமான விலை கொடுத்து வாங்குவது போல ஒரு அமைப்பு ஏற்படுத்தி கொடுத்துவிடும் இந்த ராகு, ஏழாம் இடத்தில் இருக்கிற கேது பகவான் உங்களுடைய வாழ்க்கை துணை உடல்நிலையில கவனமாக இருப்பது சிறிதாக உடல்நிலை கோளாறு ஏற்பட்டாலும் உடனடி மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது போன்ற விஷயங்களை நீங்க ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

 அதே சமயம் உங்களுடைய  பங்குதாரர்கள் கூட்டாளிகள் பங்காளிகள் உறவாளிகள் இவர்களிடம் மென்மையான போக்கு கடைபிடிப்பது நல்லது உங்களுடைய குலதெய்வ மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்கி அதற்குப் பிறகு எடுக்கின்ற காரியங்கள் உங்களுக்கு சிறப்பாக வந்து அமையும் .

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் எப்படி இருக்கும் என்று கேட்டால் தொழில் வியாபாரம் போன்ற விஷயங்கள் அற்புதமாக அழகாக நேர்த்தியாக நடைபெறும் வரக்கூடிய லாபங்கள் நன்மைகள் வந்து சேரும் இருந்தாலும் அந்த லாபங்கள் நன்மைகளை எந்த அளவுக்கு நம்ம சரியாக பயன்படுத்திக் கொள்கிறோம் .என்பதில் அதிககவனம் காட்ட வேண்டும் 

நிதி பொருளாதாரம் 

நிதி பொருளாதார நிலைமைகளை சற்று கூடுதல் கவனத்துடன் கையாள்வது  நல்ல அமைப்பை தோற்றுவிக்கும் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள் வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து வியாபாரம் செய்வதனால் நன்மைகள் அதிகமாகவே காணப்படும் ,

மாணவர்கள் 

 மாணவர்களைப் பொறுத்தவரைக்கும் இந்த 2025 வருடம் நல்ல ஞானத்தோடு படிப்பீர்கள் எடுத்த படிப்பில் வெற்றி அதிக மதிப்பெண்கள் பெறக்கூடிய வாய்ப்புகள் சிறப்பாகவே இருக்கின்றன, உயர்கல்வி மற்றும் பிஹெச்டி பிடெக் டிஜிட்டல் துறை போன்ற விஷயங்களில் படிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை கொடுக்கின்ற வாய்ப்பு அற்புதமாகவே காணப்படுகின்றது ஏஐ டெக்னாலஜி உடனான படிப்பு படித்தீர்களானால் வெளியூர் வெளிநாடு போன்ற வேலைவாய்ப்புகள் அற்புதமாக கிடைக்கும்,

படித்து முடித்த இளைஞர்கள் அரசு வேலைக்காக முயற்சி செய்து  கொண்டிருப்பவர்கள் உங்களுடைய போட்டித் தேர்வுகளில் பங்கேற்று உங்கள் அதிகளவு முயற்சி மற்றும் பயிற்சி உடன் நீங்கள் அணுகும் பொழுது போட்டித் தேர்வுகளில் சர்வசாதாரணமாக வெற்றி பெற்று அரசு வேலை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உருவாகின்றது .

ஆரோக்கியம் 

ஆரோக்கியத்தை அதாவது கும்பம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தைப் பத்தி சொன்னோம்னா ராகு பகவான் உங்களுடைய ராசியில்  இருக்கிறதுனால எந்த வேலையும் சுறுசுறுப்பா செய்யணும் ஸ்பீடா செய்யணும் உடனடியா செய்யணும் அதனுடைய உடனடியாக அதனுடைய ரிசல்ட் நமக்கு கிடைக்கணும் அப்படிங்கிற எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் ஆனால் ஏழாம் இடத்துல இந்த கேது பகவான் அதை அப்படியே டம்ப் பண்ணுவாரு அப்படியே அடக்குவாரு அதை அப்படியே குறைப்பாரு சோ இதற்கு நடுவுல நீங்க கொஞ்சம் மைண்ட் ஸ்ட்ரெஸ் சிலருக்கு உருவாகலாம் 

 பெண்களைப் பொறுத்தவரைக்கும் உடல் ஆரோக்கியத்தில் குறிப்பாக எலும்பு சம்பந்தமான தசை சம்பந்தமான விஷயங்களில் சிறிது கவனமாக இருக்கணும் சிறிதாக உடல்நிலை கோளாறு ஏற்பட்டால் உடனே மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது பயணங்களில் இரவு நேர பயணங்களை தவிர்ப்பதும் மற்றும் டூ வீலர் ஃபோர் வீலர் நீங்களே ஓட்டிட்டு போறீங்க அந்த சமயத்துல ரொம்ப கவனமாக 

 இதனால ஆரோக்கிய குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதுனால தினமும் யோகா மெடிடேஷன் உடற்பயிற்சி காலையில் எந்திரிச்சதும் சூரிய நமஸ்காரம் மற்றும் உங்களுக்கு தெரிந்த கடவுள் மந்திரங்களை உச்சரிச்சுட்டு அன்றைய தொடங்குவது சிறப்பாக இருக்கும் .

எதையும் மனதுக்கு எடுத்துச் செல்லாதீர்கள் குறிப்பாக 60 வயதை கடந்தவர்கள் மிகவும் ரிலாக்ஸாக நடைபயிற்சி உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மிகுந்த ஆரோக்கிய தொந்தரவை நீங்க குறைக்கலாம் .எந்த விஷயமாக இருந்தாலும் இலகுவாக எடுத்துக்கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காத வண்ணம் இருக்கும்.

 வெளியூர் வெளிநாடு

 வெளியூர் வெளிநாடு போகின்ற கனவுகள் கண்டிப்பாக நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகவே காணப்படுகின்றது. அதற்கான முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த காலம் பொன்னான ஒரு நல்லதொரு வாய்ப்புகளை கொண்டு வந்து கொடுக்கும்.அப்படிங்கறதுல எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை .

பரிகாரங்கள்

சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோயிலுக்கு போயிட்டு வாங்க விளக்கேற்றி வழிபட்டு வருவதன் மூலம் நல்ல ஒரு நன்மைகள் உங்களுக்கு காத்திருக்கிறது.

 ஐந்தாம் இடத்தில் இருக்கிற குருபகவான் உங்களுடைய பார்வை கும்பம் ராசி மேல் விழுவதால் எடுத்த காரியத்துல தெளிவான ஒரு அமைப்போடு ஈடுபடுவதனால நல்ல மிகப்பெரிய வெற்றிகள் உங்களுக்கு காத்திருக்கு.

 கூடுதல் உழைப்பு செலுத்தி நல்லதொரு லாபங்கள் நன்மைகளை ஈட்டுகின்ற ஒரு பொன்னான அமைப்பாக இந்த 2025 விளங்குகிறது.

கூட்டி கழித்து பார்க்கும் பொழுது இந்த 2025 ஆம் ஆண்டு

சனியின் பெயர்ச்சி நன்மையாக தாகவும் குருவின் பார்வை மிகச்சிறந்த நல்ல பலன்களும் கண்டிப்பாக கொடுக்கும் அப்படிங்கறதுல எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லைங்க ,

இது பார்த்தீங்கன்னா ஒரு பொதுவான பலன்களை தான் நம்ம சொல்லி இருக்கோம் உங்களுடைய சுய ஜாதகத்தில் இருக்கிற கோள்களின் நிலைகள் தசாபுத்திகள் இதெல்லாம் வைத்து 100% பலன்களை துல்லியமாக சொல்லலாம்

நன்றி

நான் உங்கள் அன்பு 

ஜோதிடர் சேலம் எஸ் ஜெயக்குமார் MA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *