2025 புத்தாண்டு ராசி பலன் மீனம் ராசி /2025 New Year Rasi Palan Meenam Rasi Palan

2025 New Year Rasi Palan Meenam Rasi Palan

ஹாய் பிரண்ட்ஸ் நான் தான் ஜோதிடர் ஜெயகுமார்

அனைவருக்கும்2025 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அனைவரும் செல்வவளங்களோடு நிம்மதியோடு உற்றார் உறவினர்குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக உடல் ஆரோக்கிய மேம்பாடு உடல் ஆரோக்கியத்தில் நல்ல ஒரு ன்னேற்றமும் வேலை இல்லாதவர்களுக்கு வேலை திருமணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில் நடந்து உங்கள் உணர்வுகளுக்கும் உள்ளங்களுக்கும் நல்ல ஒரு சிந்தனை வளத்தையும் கொடுத்து இந்த 2025 ஆண்டு மிகச்சிறப்பாக அமைய வேண்டும் என்று எல்லா நல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 மீனம் ராசி 2025 

2025 ஆங்கில புத்தாண்டில் மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் அப்படிங்கறது பற்றி ஒரு பொதுவான ஒரு கருத்துக்களை இந்த பதிவில் காண்போம் . 

மீனம் ராசி என்று எடுத்துக் கொண்டோமானால் கால புருஷ தத்துவத்தின் அடிப்படையில் அது 12வது வீடு மோட்ச வீடு ஆன்மீக வீடு நீர் ராசி என்று பல விதங்களில் அழைக்கப்படுவது உண்டு. இந்த மீனம் ராசிக்காரர்களுக்கு குருவை ஆட்சி வீடாகக் கொண்ட இரண்டுவீடுகள் கால அதாவது 12 ராசிகளில் இரண்டு வீடு தனுசு ராசி மீனம் ராசி அந்த மீனம் ராசி ஆட்சி வீடாகக் கொண்ட குருபகவான் உங்களுடைய இந்த 2025ல் என்னென்ன பலன்களை கொண்டு வந்து கொடுக்கப்போறார் அப்படிங்கிறது பத்தி பார்ப்போம் .

 குரு ,சனி,ராகு,கேது பெயர்ச்சிகள் 

குறிப்பாக இந்த வருடத்தில் மூன்று பெயர்ச்சிகள் அதாவது சனி பெயற்சி குரு பெயற்சி ராகு கேது பெயற்சி இந்த மூன்று பெயர்ச்சிகள் நடக்கின்றது இந்த வருடத்தில் அதுல குறிப்பா இதுவரைக்கும் 12 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான்விரயச்சனி  என்று செயல்பட்டுக் கொண்டிருந்த சனி பகவான் மார்ச் மாதம் 29 ஆம் தேதி உங்களுடைய ராசியி

ல் வந்து அமர்கிறார் .

ஏற்கனவே ஏழரை சனி பிடியில் இருந்த நீங்கள் இப்பொழுது ஏழரை சனியில் ஜென்மச்சனி இந்த ஜென்மச்சனியில் நீங்கஇதுவரைக்கும் பல விரயங்களை பார்த்திருப்பீங்க பல தொந்தரவுகளைபார்த்திருப்பீங்க தடை தாமதங்களை பார்த்திருப்பீங்க இந்த விரையச் சனியில புது சில நல்ல விஷயங்களே நடந்திருக்கும் மங்களகரமானகாரியங்கள் நடந்திருக்கும் வீடு கட்டி இருப்பீங்க புதிய வீட்டுக்கு குடி போய் போயிருப்பீங்க இந்த மாதிரி ஒரு சில நல்ல விஷயங்களும் சில விரயங்களும் வந்து அதிகமான ஒரு தாக்கங்களையும் ஏற்படுத்தி இருக்கும்.

ஜென்மச்சனி 

 இந்த ஜென்மச்சனியை  பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது ,அப்படிங்கறது நன்மைகளை கொடுக்கும் உங்களுடைய ராசிநாதனாகிய குருபகவான் மூன்றாம் இடத்திலிருந்து நாலாம் இடத்திற்கு இடப்பெயர்ச்சி மே மாதத்தில் நாலாம் இடத்திலிருந்து அதாவது மிதுனம் ராசியில அமர்கிறார்.

இந்த மிதுனம் ராசியை பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா அங்க இருக்கிற குருவுக்கு நீங்க பத்தாம் இடத்தில் ராசி அமைகின்றது   அதுமட்டுமல்ல குருவின் பார்வைகள் அப்படிங்கறது உங்களுடைய 12 ஆம் இடத்து மேல பதியறதுனால இதுவரைக்கும் மருத்துவ செலவுகள் தேவையில்லாத அலைச்சல் திரிச்சல் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்த நீங்கள் இப்பொழுது வீட்டில் மங்களகரமான ஒரு நிகழ்வுகள் நடக்க ஆரம்பிக்கும் .

பாதியில் விட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்கும் மனது தெளிவு பெறும் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் ,அலைந்து திரிந்தாவது பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருந்த நீங்கள் இப்பொழுது அதற்குண்டான நல்ல தெளிவை ஏற்படுத்தும் புதிய சந்தர்ப்பங்களை கொண்டு வந்து கொடுக்கும் .

 குருவின் பார்வைகள் 

குருவின்  பார்வைகள் பார்த்தீங்கன்னா உங்களுடைய பத்தாம் இடத்து மேலேயும் பதியுது பத்தாம் இடம் என்கிறது பார்த்தீங்கன்னா  வேலை கர்மஸ்தானம் அப்படின்னு சொல்லப்படுவது புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு அருமையான ஒரு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்குது வேலை மாற்றம் ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும் இருக்குங்க.

உத்தியோகம் 

 அரசு மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைச்ச காரியம் நினைச்சபடி நடப்பதற்கான நல்லதொரு ஆலோசனைகள் உங்க கூட வேலை செய்பவர்கள் ஆதரவு மேல் அதிகாரிகள் உயர்அதிகாரிகளுடைய இணக்கமான  போக்கு விரும்பிய இடமாற்றங்கள் ஊதிய உயர்வு பதவி உயர்வு போன்ற நல்ல விஷயங்கள் இந்த காலகட்டத்தில் குருவின் பார்வைகளினாலநடக்கும் .ஆனால் வேலையில சில மாற்றங்களை நீங்க எதிர்பார்க்கலாம்.

 அதேபோல உங்களுடைய வாழ்க்கை துணைவருடைய தாய் தந்தையர் வீட்டிலிருந்து அதுவும் உங்க மாமனார் மாமியார் மாமன் வகையில நல்லதொரு நன்மைகள் உங்களுக்கு நடக்க காத்திருக்கு அப்படின்னு சொல்லலாம் . வேண்டாத சில பழக்க வழக்கங்கள் அப்படி எல்லாம் சில பேருக்கு இருந்துச்சு அந்த கெட்ட சகவாசங்கள் கெட்ட பழக்கவழக்கங்கள் நீங்க விட்டு ஒழிக்கின்ற ஒரு காலகட்டமாக இந்த மீனம் ராசிக்காரர்களுக்கு இருக்குங்க விரும்பிய நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் உங்களோடு வந்து இணைந்து உங்கள் நட்பை பாராட்டுகின்ற ஒரு அமைப்பு சிறப்பாகவே காணப்படுகின்றது.

 ராகு கேது தாக்கம் 

 அதுபோக இதுவரைக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த ராகு கேது ராகு பகவான் உங்களுடைய ஜென்ம ராசியில் மீனம் ராசியிலேயே இருந்து கொண்டு ஏழாம் இடத்துல வரக்கூடிய நன்மைகளை தடை செய்து கொண்டிருந்த கேது பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார். அதாவது மீனம் ராசிக்கு 12 ஆம் இடத்துல ராகு பகவானும் ஆறாம் இடத்துல கேது பகவானும் இடப்பெயர்ச்சி இதன் மூலமாக வெளியூர்  வெளிநாடு போகணும் அதற்காக ஒரு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறீர்கள் படிப்பிற்காக இருக்கலாம் வேலைக்காக இருக்கலாம் போன்ற விஷயங்களில் எல்லாம் முன்னெடுத்து நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அருமையான வெளியூர் வெளிநாடு வாய்ப்புகள் உருவாக சந்தர்ப்பங்கள் கூடி வருதுங்க .

அதுபோல சில மங்கள காரியங்களில் தடை தாமதங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த ராகு கேது இப்பொழுது பெயர்ச்சி ஆகிறதுனால அந்த மங்கள காரியங்கள் இனிதே நடக்கக்கூடிய அருமையான வாய்ப்புகள் உருவாகின்றது .

இந்த மீனம் ராசிக்காரர்களைப் பொறுத்தவரைக்கும் குருவின் பார்வை 12 ஆம் இடத்திலயும் பத்தாம் இடத்திலும்  ருக்கிறதுனால தொழில் வளர்ச்சி பெறும்  பொருளாதாரங்கள் என்பது உயரும் நிதி சம்பந்தமான விஷயங்களில் சற்று கூடுதல் கவனம் எடுத்துக்கிறது நல்லதுங்க .

அதேபோல குருபகவான் உங்களுடைய எட்டாம் இடத்தையும் பார்க்கிறதுனால இடமாற்றங்கள் அப்படிங்கறது ,இருக்குற இடம் தெரியாம இருக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க இல்லைங்களா அந்த மாதிரி நீங்க எவ்வளவு உயர போனாலும் ஒரு எளிமையை கடைபிடிப்பது இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும் .

கவனமாக இருப்பது

தாய் தந்தையரின் உடல்நிலையில சற்று கவனமாக ஏற்படுத்திக் கொள்வது நல்லது இரவு நேர பயணங்களை கூடிய வரைக்கும் தவிருங்க டூ வீலர் ஃபோர் வீலர்ஸ் நீங்களே டிரைவ் பண்றீங்க அப்படிங்கிற விஷயத்துல தக்க முன்னேற்பாடுகள் தக்க துணையோடு நீங்க செல்வது அப்படிங்கிறது சிறப்பு.

 கால் முட்டி போன்ற விஷயங்கள் அதாவது கால்சியம் குறைபாடு இதெல்லாம் வருகின்ற அமைப்பு இருக்கிறதுனால சத்தான உணவு வகைகளை கீரை வகைகளை எடுத்துக்கொள்வது நன்மை கொடுக்கும் அன்பு அரவணைப்பு பாசம் நேசம் ஆகிய அனைத்தும் கலந்த மகிழ்ச்சியான ஒரு குடும்ப அமைப்பு அப்படிங்கறது உங்களுக்கு உருவாகும் .

குழந்தை குழந்தைகளினால் மனமகிழ்ச்சி சந்தோஷம் கூடும் எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடி நடப்பதற்கு நீங்க உங்களுடைய குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளனும் .

மனசுல காரணமில்லாமல் இருந்த சில குழப்பங்கள் தெளிவு இல்லாத ஒரு மனநிலை இதெல்லாம் மறையும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் உங்களை அனுசரிச்சு போகவாங்க குடும்பச்சூழல் அப்படிங்கறது ரொம்ப சந்தோஷமான மாற்றங்களை காண்பிங்க ,

இதுநாள் வரைக்கும் குழந்தைச் செல்வம் இல்லை அப்படின்னு ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தைச் செல்வம் பெற்றெடுக்கும் வாய்ப்பு நல்ல ஒரு ஆன்மீக பரிகாரியங்களினாலும் மருத்துவ நிலைமைகளினாலும் உங்களுக்கு உண்டாகும் .

ஆரோக்கியத்தில் நல்ல ஒரு மேம்பாடு சோம்பல் தன்மை மறையும் சுறுசுறுப்பு அடைவீர்கள் நீண்ட நாட்களாக நிலவி வந்த கடன் சுமைகள் குறையும் கடன் கட்டுவீங்க புதிதாக கடன் வாங்குறது அமையும் நீங்க கடனை குறைச்சிக்கிறது அப்படிங்கறது சிறப்பு .

சொத்து சேர்க்கை அமையுமா 

புதிய வீடு மனை வாகனச் சேர்க்கைகள் உண்டாகும் அதாவது வேலை செய்பவர்களுக்கு உங்கள் அலுவலகம் தொடர்பான விஷயங்களில் ரொம்ப திருப்தி அடைவீங்க மேலதிகாரி ஏற்கனவே சொன்ன மாதிரி இணக்கமான போக்கு கூட ஒர்க் பண்றவங்களுடைய நல்லதொரு புரிந்துணர்வு உதவிகள் கிடைக்கப்பெற்று மிகுந்த உற்சாகத்தோடு செயல்படுவீங்க .

 

உங்களுடைய வங்கி சேமிப்பு அப்படிங்கறது உயரம் எட்டாம் இடத்து பார்வையினால பல வழிகளில் உங்களுக்கு பணம் வருங்க தொழில் செய்பவர்கள் வியாபாரிகளுக்கு பல போட்டி சவால்களை முறியடிச்சு வியாபாரத்தை முன்னேற்ற போறீங்க கணிசமான லாபம் வந்துட்டு இருக்கும் வாடிக்கையாளர்களை திருப்தி செய்வதில் உங்களுக்கு முழு கவனம் இருக்கும் விளம்பரத்தன்மையோடு உங்களுடைய வியாபாரம் மேலும் விரிவாக்கம் செய்வீங்க .

தொழில் வியாபாரம் 

தரமான பொருட்களை நீங்க வியாபாரம் செய்றதுனால உங்கள் பெயர் புகழ் கௌரவம் அந்தஸ்து எல்லாமே கூடும் ஆனா கடன் கடன் கொடுத்து வியாபாரம் பண்றது அப்படிங்கிற விஷயத்துல சற்று கவனமாக இருக்கணுங்க .

பெண்களுக்கு 

பெண்களைப் பொறுத்தவரைக்கும் அதாவது இடம் சேஞ்ச் அதாவது கணவன் ஒரு இடத்திலயும் மனைவி ஒரு இடத்துலயும் வேலை செஞ்சிட்டு இருந்தீங்க ,இந்த நிலைமைகள் மாறி இருவரும் சேர்ந்து வாழும் நிலைமை இந்த 2025ல உருவாகுங்க. தள்ளிப்போன திருமண வாய்ப்பு மீண்டும் திருமண பந்தத்தில் நுழையப் போறீங்க ,திருமண யோகம் இருக்கு விரும்பியவரே மனம் முடிக்கின்ற தன்மை இருக்கு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் வர வாய்ப்பு அதிகமாக இருக்கு குடும்ப விஷயங்களில் அதிகமாக கவனம் செலுத்துவீங்க சண்டை சச்சரவு போட்டியான மனநிலைமை தேவையில்லாத வாக்குவாதம் இதெல்லாம் சமாளிச்சு அனைவருடைய நல்ல மதிப்பையும் அன்பையும் பெறப்போறீங்க.

கலை  துறையினருக்கு 

 கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் அப்படிங்கறது இயல்பாகவே கிடைக்குங்க பெரும் முயற்சி செய்யணும் ரொம்ப அலைஞ்சு திரிஞ்சு இந்த முயற்சி பண்ணி பண்ணாதான் இந்த வாய்ப்பு கிடைக்கும் அப்படிங்கிற அவசியம் இல்லை இந்த 2025 வருடம் இயல்பாகவே உங்களுக்கு கிடைக்கும் ஆனாலும் போட்டி கடுமையாக இருக்கும் சவால்களை முறியடிச்சுதான் நீங்க கலைத்துறையின முன்னேறப்போறீங்க புகழ் கௌரவம் அந்தஸ்து எல்லாமே உயரப்போகுது எல்லாரிடத்திலயும்  அனுசரணையா சுமுகமாக நடந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு நல்லதொரு வாய்ப்புகள் கண்டிப்பாக கூடி வருதுங்க .

மாணவர்களுக்கு 

மாணவர்களைப் பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா படிப்பு மட்டும் இல்லாம விளையாட்டு எக்ஸ்ட்ரா கரிகுலர் இதெல்லாம் நீங்க உங்க தனி திறமைகளை வெளிப்படுத்த போறீங்க பலரின் பாராட்டுகளை பெறப்போறீங்க வெளி நாட்டுக்கு போய் படிக்கணும் அப்படிங்கிற எண்ணங்கள் அதற்கு உண்டான வாய்ப்புகளை உருவாக்கும் படிப்புக்கு மட்டுமே நீங்க முக்கியத்துவம் முன்னுரிமை இந்த காலகட்டத்தில் கொடுக்கணுங்க ஏன்னா ஜென்மச்சனி போயிட்டு இருக்கு சோ கவனச்சிதற்கள் அதிகமாக இருக்கும் அதையெல்லாம் முறியெடுத்து ஆன்மீக ரீதியாக நீங்க செயல்படுவதன் மூலம் படிப்புல நல்ல ஒரு மதிப்பெண்கள் காணப்போறீங்க.

ஆரோக்கியம் 

 குறிப்பா ஆரோக்கியம் அப்படின்னு எடுத்துக்கிட்டோம்னா இந்த 2025ல ஜென்மச்சனி அப்படிங்கறது சில நேரங்களில் சோம்பல் தன்மை சுறுசுறுப்பு இல்லாத தன்மை இன்றைய காரியங்களை நாளைக்கு பார்த்துக்கலாம் அப்படிங்கிற ஒத்தி போடுகின்ற தன்மை இதெல்லாம் வரும் ஆனால் சனி பகவான் உங்களுடைய வீட்ல இருக்கிறதுனால எந்த அளவுக்கு சனி ஸ்லோ பிளானட்டோ அந்த அளவுக்கு நீங்க சுறுசுறுப்பா ஆக்டிவேட் பண்ணீங்கன்னா அந்த சனி பகவான் உங்களுக்கு நல்ல ஒரு உச்சத்தை கண்டிப்பா கொடுப்பாரு .காலையில எழுந்திருச்சதும் சூரிய நமஸ்காரம் பண்ணிட்டு உங்களுடைய குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வணங்கி உங்களுக்கு தெரிந்த கடவுள் மந்திரங்களை உச்சரிச்சு யோகா மெடிடேஷன் உடற்பயிற்சி நடைபயிற்சி இதெல்லாம் பண்ணிட்டு இன்றைய நாளை தொடங்குங்க அற்புதமான ஒரு காலகட்டமாக அற்புதமான ஒரு மாற்றங்களை கொண்டு வந்து கொடுக்கின்ற ஒரு தன்மைகள் மீனம் ராசிக்காரர்களைப் பொறுத்தவரைக்கும் சிறப்பாகவே இருக்குங்க .

 பரிகாரங்கள் மற்றும் ஜோதிடரின் ஆலோசனைகள் 

அருகில் இருக்கிற சனி பகவான் ஆலயத்திற்கு போயிட்டு வாங்க வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி அல்லது குருபகவான் ஆலயத்திற்கு சென்று உங்கள் வழிபாட்டை மேற்கொள்ள மூலம் நல்ல ஒரு முன்னேற்றத்தை இந்த மீனம் ராசிக்காரர்கள் சிறப்பாகவே அடையப் போறீங்க.

 உங்களால் முடிந்த அளவு இயலாதவர்களுக்கு நீங்க உதவிகள் செய்து வாருங்க ஏழை மாணவர்களுக்கு உங்களால் சீருடை மற்றும் படிப்புக்குத் தேவையான உபகரணங்களை நீங்க வாங்கிக் கொடுங்க ,மாதத்துல ஒரு நாளாவது ஒரு இரண்டு பேர் அல்லது மூன்று பேருக்காவது நீங்க அன்னதானம் கொடுத்து கொடுத்து வந்தீங்கன்னா மீனம் ராசிக்காரர்கள் இந்த ஜென்மச்சனி தாக்கம் குறைந்து இந்த 2025ல நல்ல ஒரு முன்னேற்றம் கண்டிப்பாக அடைவீர்கள் அப்படிங்கறதுல எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லைங்க .

இது பார்த்தீங்கன்னா ஒரு பொதுவான பலன்களை தான் நம்ம சொல்லி இருக்கோம் உங்களுடைய சுய ஜாதகத்தில் இருக்கிற கோள்களை நிலைகள் தசாபுத்திகளை இதெல்லாம் வைத்து 100% முழுமையான பலன்களை நீங்க அறிந்து கொள்ள முடியும் 

நன்றி

உங்கள் அன்பு ஜோதிடர் 

சேலம் எஸ் ஜெயக்குமார் MA 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *