2025 புத்தாண்டு ராசி பலன் மேஷம் ராசி /2025 New Year Rasi Palan Mesham Rasi
அனைவர்க்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025
இந்த பதிவில் மேஷம் ராசிக்காரராகளுக்கு 2025 ஆங்கில புத்தாண்டு பலன் எப்படி இருக்கும் என்று பொதுவான பலனை பார்ப்போம்
மேஷம் ராசி 2025: பொதுப்பார்வை
மேஷ ராசி அன்பர்களே! செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு பல்வேறு விதமான மாற்றங்களையும் தெளிவையும் மற்றும் முன்னேற்றங்களை தருகிறது. கடந்த வருடங்களில் ஏற்பட்ட அலைச்சல்கள் தடைகள் தாமதங்கள் குறைந்து, நடந்துகொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். மனதை ஒரே நேர் கோட்டில் செலுத்தி உழைக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.
குடும்ப வாழ்க்கை மாற்றங்கள்
குடும்பத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் வேகம் பெறும். உங்கள் பேச்சுக்கு குடும்ப உறவுகளில் மதிப்பு கிடைக்கும் , இது உங்கள் மனநிலையை மேலும் சீராக மாற்றும். உறவினர்களுடன் இருக்கும் மனக்கசப்புகள் மாறி ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் பேச்சில் ஏற்படும் நியாயமான அணுகுமுறை உங்கள் குடும்பத்தை மேலும் உறுதியாக இணைக்கும். குடும்பத்தினர் உங்களை ஆதரித்து மேலும் முன்னேற பக்கபலமாக இருப்பார்கள் ..
Mesham Rasi
பொருளாதார முன்னேற்றம்
இந்த ஆண்டு பொருளாதாரத்தில் பல முன்னேற்றங்களைக் காண்பீர்கள். வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பி வரும். புதிய சொத்து வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். முந்தைய முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் தாமதங்கள் அனைத்தும்மாறி ,
தொழில் வளர்ச்சி மற்றும் பண வரவை மேம்படுத்தும் சந்தர்ப்பங்கள் உருவாகும் . நண்பர்கள் எதிர்பார்ப்பதற்கு மேலான உதவிகளைச் செய்வார்கள், இது உங்கள் சமூக அந்தஸ்தை உயர்த்தும்.
ஆரோக்கிய முன்னேற்றம்
உடல் ஆரோக்கியம் இந்த ஆண்டில் குறிப்பாக மேம்படும். மன அழுத்தம் குறைந்து வாழ்க்கை சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள் .ரண சிகிச்சை போன்ற சிக்கல்களிலிருந்து தப்புவீர்கள்.
மாற்று மருத்துவம் அல்லது இயற்கை மருத்துவத்தின் மூலம் பலன் அடைவீர்கள். தினசரி யோகா மற்றும் பிராணாயாமம் போன்றவை உங்களின் தேக நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்
பெண்கள் வாழ்வில் மாற்றங்கள்
மேஷ ராசி பெண்களுக்கு இந்த ஆண்டு பல சாதகமான மாற்றங்களை தரும். கணவரின் அன்பு பாசம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களை அனுசரித்து உங்கள் எண்ணங்களை மதிப்பார்கள்.
ஆன்மீக சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பேசும் நேரத்தில்வார்த்தைகளில் கவனமாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
உத்தியோக வாய்ப்புகள்
அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் விரும்பிய இடமாற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மேலதிகாரிகள் உங்களின் திறமையை உணர்ந்து உங்களை ஆதரிப்பார்கள். அலுவலக சூழலில் உங்கள் மதிப்பு மரியாதை மற்றும் செல்வாக்கு உயரும். எவரையும் குறை கூறாமல் நடந்துகொள்வது மேலும் உங்களை வளர்க்கும் .
வியாபாரம் மற்றும் முதலீடுகள்
வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு நல்ல வளர்ச்சியை தரும். வாடிக்கையாளர்களுடன் நிதானமாகப் பழகுவதால் சிறந்த லாபம் கிடைக்கும். கடுமையான போட்டி சவால்களை சமாளித்து வெற்றியை அடைவீர்கள். கூட்டாளிகளுடன் நல்லுறவை பேணுவது முக்கியம். புதிய முதலீடுகளில் எச்சரிக்கையாக இருக்கவும்.
அரசியல் மற்றும் சமூக அந்தஸ்து
அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளை பூர்த்தி செய்து நல்ல பெயரைப் பெறுவார்கள். உங்கள் முயற்சிகள் கட்சித் தலைமையிடம் உங்களை உயர்த்தும்.
எதிரிகளின் பொய் பரப்புரைகள் உங்கள் பெயரை பாதிக்காது. சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும், ஆனால் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கலைத்துறையினர்: புகழ் மற்றும் செல்வாக்கு
கலைத்துறையினருக்குபுதிய புதிய வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் கூட நிகழும்.
மாணவர்கள் மற்றும் கல்வி
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். ஆசிரியர்களின் ஆதரவு அதிகரிக்கும். விளையாட்டிலும் சாதனை படைப்பீர்கள். யோகா மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகள் உங்களின் திறனை மேலும் மேம்படுத்தும். எல்லா சோதனைகளையும் வெற்றி பெற உழைத்தால், எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்:பிறந்தவர்களுக்கு
அசுவினி: இந்த ஆண்டு மனதில் தைரியம் குறையும் அதிகமாகும் , ஆனால் தன்னம்பிக்கை உயர்ந்த நிலையை அடையும். மனகவலை குறைந்தாலும் மதிப்பு குறையாது .திடீர் செலவுகளுக்கு தயாராக இருக்க வேண்டும். எதையும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
பரணி: தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் காணலாம். ஆனால் குடும்ப உறவுகளில் வெளிநபர்கள் உண்டாக்கும் குழப்பங்களைத் தவிர்க்க வேண்டும். மனக்குழப்பம் நீங்க உறவினர்களுடன் மனம் விட்டு பேசுவது முக்கியம்.
கார்த்திகை 1ம் பாதம்: பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் அதிகரிக்கும். கணவனின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பயணங்களைத் தவிர்க்கவும். உங்கள் புத்திக்கூர்மை பல சிக்கல்களையும் சமாளிக்க உதவும்.
இந்த வருடம் மேஷ ராசி அன்பர்களுக்கு வாழ்க்கையின் பல துறைகளிலும் முன்னேற்றங்களை தரும். ஆனால் எப்போதும் நிதானமாக செயல்படுவது உங்கள் வெற்றியை உறுதி செய்யும்.
உங்கள் ஜோதிடர் எஸ் ஜெயக்குமார் MA