2025 புத்தாண்டு ராசி பலன் துலாம் ராசி /2025 New Year Rasi Palan Thulam Rasi
அனைவர்க்கும் 2025 ம் ஆண்டு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .இந்த இந்த இனிய 2025 ம் வருடத்தில் அனைவரும் செல்வ வளங்களோடு மன நிம்மதியோடு நல்ல ஆரோக்கிய அமைப்போடு வாழ எல்லாவல்ல இறைவனை பிராத்திக்கிறேன் .
2025 ம் ஆங்கில புத்தாண்டில் துலாம் ராசிக்காரர்களுக்கு எவ்வாறு பலன் இருக்கும் என்பதை இந்த பதிவில் பொது பலனாக பாப்போம் .
இந்த 2025 ம் வருடம் சனி பெயர்ச்சி துலாம் ராசிக்கு தைரியம் வீரியம் பல மடங்கு அதிகமாகி எடுத்த காரியத்தில் வெற்றி விடாமுயற்சியுடன் எதையும் செய்து அந்த காரியத்தில் ஜெயம் .நினச்சகாரியம் நினச்சபடி நடக்கும் ஆற்றல் ஆற்றல் வீச்சு அற்புதமாகும் .
சனி பெயர்ச்சி
2025 ம் வருடத்தில் அனைத்து பெயர்ச்சிகளும் துலாம் ராசிக்காரர்களுக்கு மிக சாதகமாக இருக்கப்போகிறது ,குறிப்பாக இது வரை 5 ம் இடத்தில இருந்து வந்த சனி பகவான் பல தொல்லைகளையும் முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் குடுத்து வந்தார் ,இப்பொது அந்த நிலைமை மாறப்போகிறது ,
சனி பகவான் இடமான மீனம் ராசிக்குள் வருவது மிக அருமை துலாம் ராசிக்கு ,கடன் நோய் எதிரி என்று சொல்லப்படும் ஸ்தானத்திற்கு அதாவது மீனம் ராசிக்கு சனி வருவது எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் பிறக்கும் ,கடன் காணாமல் போகும் .நோய்நொடிகள் அகலும் .இதுவரை அச்சுறுத்தி கொண்டிருந்த கடன்களை அடைப்பீர்கள் ,சொல்வாக்கு அதிகரிக்கும் ,செல்வாக்கு பிறக்கும் ,
நீண்ட நாள் தள்ளி போன வேலை ,தொழில் சார்ந்த விஷயங்கள் சுறுசுறுப்புடன் நடக்கும் ,வேலை தேடுபவர்களுக்கு உடனடியாக நல்ல வேலை வாய்ப்பு உண்டாகும் ,உயரதிரிகளுடன் உண்டான மனக்கசப்பு அகலும் ,தொல்லை நீங்கும் ,சக ஊழியராகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள் ,உதவுவார்கள்,
வீட்டில் பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டாகும் ,
அனால் இந்த கால கட்டத்தில் யாருக்கும் ஜாமீன் ,போடுவது ரெகமெண்ட் செய்வது ,யாரையும் திட்டுவது கோபமாக நடந்து கொள்வது கூடாது .
ராகு கேது பெயர்ச்சி
ராகுவானவர் 5 ம் இடத்துக்கு வருவதை வெளியூர் வெளிநாடு பிரயாணங்கள் உண்டாகலாம் ,பிள்ளைகள் விஷயத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போவதும் ,அவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது உத்தமம் ,
கேதுவின் பெயர்த்தி துலாம் ராசிக்கு 11 ம் இடத்துக்கு வருவது சூப்பர் தடையாகி போன எல்லா விஷயங்களும் தடையின்றி நடந்து நன்மைகளை அள்ளி கொடுக்கும் ,லாபம் அதிகரிக்கும் ,மனதில் ஆசை பட்ட விஷயங்கள் நடக்கும் .
குருவின் பெயர்ச்சி
குருவானவர் துலாம் ராசிக்கு 9 ம் இடத்துக்கு அதாவது பாக்கியஸ்தானத்திற்கு வருவது மிகுந்த நன்மைகளை ஏற்ப்டுத்த போகுது ,
அதுமட்டுமல்ல குருவின் விசேஷ பார்வை 5 ம் பார்வை உங்கள் ராசி மேல் படுவதால் எதையும் துணிந்து நின்று வெற்றி வாகை சூடுவீர்கள் ,இதுவரை முடியாத காரியம் சற்றென்று நடக்கும் .
கணவன் மனைவி உறவில் அன்பு பலப்படும் ,ஒருவருக்கொருவர் புரிந்து நடந்துகொள்வீர்கள் ,இருவரும் ஒன்றினைந்து புதிய காரியம் எதிர்கால தேவைகளை மனதில் கொண்டு தொடங்குவீர்கள் ,வீடு ,மண் ,மனை யோகம் உண்டாகலாம் ,சொத்து சேர்க்கை உண்டாகும் ,உங்கள் முயற்சி 100 சதவீதம் வெற்றியை கொடுக்கும் .
பிள்ளைகளினால் மன மகிழ்ச்சி உண்டாகும் ,இதுவரை தள்ளி போன குழந்தை பேறு இப்பொது கிடைக்கும் ,வரன் பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமைந்து திருமண பாக்கியம் உண்டாகும் .
மாணவர்கள்
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் ,விரும்பிய படிப்பில் இடம் கிடைக்கும் ,அனால் கொஞ்சம் கவன சிதறல் காணப்படுவதால் ஆழ்ந்து படிப்பது நன்மை தரும் .
வேலை ,தொழில் , வியாபாரம்
வேலைக்காக அரசு துறைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நன்றாக பயிற்சி முயற்சி கவனத்தோடு போட்டி தேர்வினில் பங்கு கொண்டு வெற்றி பெறுவீர்கள் .உள்ளூர் வெளியூர் எந்த இடமாக இருந்தாலும் நல்லது ,ஏற்கனவே வேலை யில் உள்ளவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் உண்டாகும் பதவி உயர்வு ,மாற்று ஊதிய உயர்வு கிடைக்கும் .
குறிப்பாக கலை துறை மீடியா துறையில் இருப்பவர்களுக்கு உங்களின் தனி திறமைகளை நிரூபிக்க வாய்ப்புகள் தேடி வரும் சரியாக பயன்படுத்திக்கொண்டடீர்களானால் வாழ்வில் வசந்தகாலம்தான் இனி எப்போதும் .
வியாபாரம் தொழில் துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும் அனால் அதை பக்குவமாக பயன் படுத்தவேண்டும் ,தேவை இல்ல காரணங்களுக்கு முதலீடு என்பதை தவிர்க்கவும் அதேபோல தொழில் மாற்றம் அதிகப்படியான முதலீடு என்பது அதற்குரிய வல்லுநர்களை கலந்தது ஆலோசித்து முடிவு எடுப்பது நஷ்டத்தை தவிர்க்க உதவும் .
ஆரோக்கியம்
துலாம் ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டு ,குறிப்பாக உணவு விஷத்தில் கவனம் தேவை நேரத்திற்கு சத்தான உணவுப்பொருட்கள்,காய் கீரை அதிகம் சேர்ப்பது நல்லது குறிப்பாக கால்சியம் குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.குரு பார்வை துலாம் ராசியின் மேல் படுவதால் உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் யோகா உடற்பயிற்சி நடை பயிற்சி உடனே துவங்குங்கள்.
ஆன்மீக செயல்பாடு
தினமும் சூரிய நமஸ்காரம் ,யோகா உங்களுக்கு தெரிந்த கடவுள் மந்திரங்களை உச்சரித்து நாளை தொடங்குங்கள் ,குல தெய்வ ,இஷ்ட தெய்வ பிரார்த்தனை மட்டுமில்லாது திருச்செங்கோட்டில் உள்ள நரசிம்மரை வழிபாடு செய்வது நல்லது .
நன்றி
உங்கள் ஜோதிடர்
சேலம் எஸ் ஜெயக்குமார் MA