நினச்சபடி நினச்சபடி காரியங்கள் நடக்குதுங்க 2025
2025 New Year Rasi Palan Viruchigam Rasi
விருச்சிக ராசி புத்தாண்டு ராசிபலன் 2025
அனைவர்க்கும் 2025 இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .இந்த 2025 , வருடத்தில் பல சாதனைகளை செய்து எதிலும் வெற்றி எங்கும் வெற்றி பெற்று வாழ்க்கையில் மென் மேலும் உயர எல்லாவல்ல இறைவனை பிராத்திக்கிறேன் .
விருச்சிகம் ராசியினருக்கு அற்புதமான முன்னேற்றங்களை இந்த 2025 ஆம் ஆண்டுஉங்களுக்கு கொண்டுவரப் போகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டில் சந்தித்த சிக்கல்களுக்கும் தடைகளும் தீரும் காலமாக திகழப்போகிறது இந்த 2025 ம் ஆண்டு .
. உங்கள் முயற்சிகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும்; உங்கள் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் புதிய தொடக்கங்களை உச்சங்களையும் அடைய போகிறீர்கள். என்பதை பற்றி இந்த 2025 ஆண்டு உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவரும் என்பதைப் பார்ப்போம்.
குரு பெயர்ச்சி: புதிய வாழ்க்கையின் திறவுகோல்
2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு வக்கிரமாக ஆறாம் வீட்டில் பயணித்துக் கொண்டிருப்பார். நீங்கள் சந்தித்த இடம் மற்றும் நிலம் தொடர்பான சிக்கல்கள், இந்த ஆண்டுநல்ல முடிவுக்கு வரும் ஆண்டாக காணப்படும்.
பிப்ரவரி மாதம்7 ம் தேதி வரை ,சிக்கலான சவாலான காரியங்களில் உங்கள் முயற்சிகளின் மூலம் அதை வெற்றி பெறும் நிலைக்கு கொண்டு வருவீர்கள்.
குருவின் பார்வை பலம்
-
தொழில்நிலை உயரும்
-
உங்கள்பொதுவாழ்வில் பெயர்,புகழ்,கூடும்
-
குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அனுபவிப்பீர்கள்.
பிப்ரவரி 7 ம் தேதி பிறகு குரு 7 ம் வீட்டில் பயணிக்கும், இது உங்களுக்கு 7 ம் வீடு புதிய முயற்சிகள், உறவுகளில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார லாபங்களை வழங்கும். முகத்தில் புதிய பொலிவும் மனதில் தெம்பும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
8ம் இடத்தில் அஷ்டம ஸ்தானத்தில் குருவின் பெயர்ச்சி
குரு பகவான் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகும் போது, சில தடை தாமதங்களை உங்களுக்கு உருவாக்கலாம் அனால் இது மிக சில காலம் மட்டுமே ,இதை உங்களின் பொறுமை ,நிதானம் விட்டு குடுத்து போவது போன்ற நல்ல குணங்களால் வெற்றி பெறுவீர்கள் ,எதையும் மனதிற்குள் கொண்டு செல்லாதீர்கள்
-
வேலை ,தொழில்,வியாபாரம் நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும் இது குடும்பத்தை விட்டு பிரிந்த செல்கிறோம் என்ற உணர்வு வந்தாலும் அது எதிர் கால நன்மைக்கே மட்டுமே என்பது பிறகு புரியும் .
இவை உங்கள் அனுபவத்தை மேலும் உயர்த்தும். உங்கள் தகுதியும் திறமையும் வெளிப்படும் சூழல் உருவாகும். குருவின் பார்வை காரணமாக புதிய வீடு ,மண் ,மனை யோகம் உண்டாகும் வாய்ப்பு கிடைக்கும்.
ராகு கேது பெயர்ச்சி: வாழ்க்கை மாற்றம் தரும் தருணம்
பத்தாம் வீட்டில் கேது பெயர்ச்சி ஏற்படும் போது, உங்கள் தொழில் மேம்படும். அரசு உத்தியோகத்திற்கு முயல்பவர்களுக்கு கடினமாக தனி திறமைகளை வளர்த்திக்கொள்ளவேண்டும் எதையும் வெளிப்படையாக நியாய தர்மங்களோடு செய்கின்ற காரியங்கள் சிறக்கும்
கேதுவின் பெயர்ச்சியின் பலன்கள்:
-
தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.
-
ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும்.
-
புதிய நகரங்கள் அல்லது வெளிநாடுகளில் வசிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
நான்காம் இடத்தில் இருக்கும் ராகுவின் நிலை, குடும்பம் மற்றும் சொத்து தொடர்பான முன்னேற்றங்களை ஏற்படுத்தும்.
உங்கள் ராசி நாதன் செவ்வாய் பெயர்ச்சி: நம்பிக்கையும் முன்னேற்றமும்
செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால், சிறிய தடைகள் தோன்றினாலும், அதனைக் கடந்து செல்லும் சக்தி உங்களிடம் இருக்கும். செவ்வாய் உங்கள் அதிபதி ராசியில் நீச்சத்தில் பயணிக்கின்றார் என்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
செவ்வாயின் பலன்கள்:
-
பொருளாதார நிலை உயர்வடையும்.
-
தொழிலில் புதிய வாய்ப்புகள் பிறக்கும்.
-
வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.
செவ்வாய் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகும் போது, விட்டதை பிடிக்கும் இழந்ததை மீண்டும் பெறும் வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக வாழ்க்கையின் பொருளாதார மேம்பாடு உண்டாகும்
2025 ஆம் ஆண்டு முழுமையான பார்வை
இந்த ஆண்டு உங்கள் விருச்சிக ராசிக்கான முக்கிய தருணங்களை உருவாக்கும். உறவுகள் பலப்படும் பிரிந்தவர்கள் ஒன்று கூடும் வாய்ப்பு உண்டாகும் ,தொல்லை கொடுத்தவர்களே உங்களை பாராட்டி உங்களோடு இணைவர்
உங்கள் முயற்சிகள் வெற்றியை நோக்கி நகரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் தொழில்நிலை மேம்பாட்டிற்கும் இது சிறந்த தருணம்.
சொத்துக்கள் வாங்குவது ,புதிய வீடு கட்டுதல் புதிய வாகனம் வாங்குதல் ஆடை ஆபரண சேர்க்கை இன்ப சுற்றுலா போன்ற மனதுக்கு பிடித்த விஷயங்கள் இனிதே நடக்கும் .
விருச்சிக ராசி புத்தாண்டு ராசிபலன் 2025
2025 ஆம் ஆண்டு, நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் பல நன்மைகளை கொண்டுவரும். உங்கள் முயற்சிகளும் உழைப்பும் வெற்றியை நோக்கி நகரும். எல்லா துறைகளிலும் உங்கள் ராசி உயர்வடையும். இதனால் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் நிரம்பும்.
ஆனால் வெளியில் காட்டி கொள்ளாதீர்கள் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கவேண்டும் என்பார்களே அது போல எளிமையாக இருந்தால் மிக நல்லது பல பிரச்னைகளை தவிர்க்கலாம்
பொருளாதாரம் முன்னேற்றம் அடையும்
திருமணம்கை கூடும் புதிய உறுப்பினர் வருவார்கள்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்
சொத்து சுகம் வாகனம் அமையும்
நன்றி
உங்கள் அன்பு
ஜோதிடர் சேலம் எஸ் ஜெயக்குமார் MA