2025 புத்தாண்டு ராசி பலன் கன்னி ராசி /2025New Year Rasi Palan Kanni Rasi
அனைவருக்கும் 2025 ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
இந்த பதிவில் 2025 ஆங்கில புத்தாண்டு கன்னி ராசி பலன் எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி பொதுவான பலன்களை பாப்போம் .
2025 ம் ஆண்டு கன்னி ராசிகர்ரகளுக்கு அருமையான அற்புதமான வருடமாக திகழ ப்போகிறது யோகமான ஆண்டாக நன்மைகளை வாரி வழங்கும் உன்னதமான வருடம் என்று சொன்னால் மிகை இல்லை
ராகு கேது பெயர்ச்சி
இதுவரை கன்னி ராசியை மிகவும் பாடு படுத்திக்கொண்டிருந்த கேது 12 ம் இடத்துக்கும் மற்றும் 6 ம் இடத்துக்கு ராகு இடம் மாறுவது மிக அருமையான பலன் ஆகும் கன்னி ராசி காரர்களின் சிந்தனை திறன் படைப்பாற்றல் தெளிவு புத்திசாலித்தனம் பளிச்சிடும் எடுக்கும் காரியங்களில் வெற்றி நண்பர்களால் உதவி வாழ்க்கை துணை மற்றும் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு புதிய புதிய வாய்ப்புகள் அலைமோதும்
சனி 7 ம் இட பெயர்ச்சி
குரிப்பாக சனி 6 இடத்தில இருந்து 7 இடத்துக்கு பெயர்ச்சி ஆவது வேலை வாய்ப்பு அதிகரிக்கும் எதையும் ஒருதடவைக்கு 2 தடவை யோசித்து செய்யும் திறனை சனி தூண்டும் ஆனால் தாமதம் ஆகுமே தவிர எடுக்கிற காரியம் சிறக்கும் வெற்றி பெரும் .எந்த அளவுக்கு நீங்கள் சரியான பாதையை தேர்ந்தெடுத்து காரியத்தில் ஈடுபடுகிறீர்களோ அந்த காரியம் அளவு கடந்த வெற்றி பெறுவீர்கள் .குறுக்கு வழியை நாடாதீர்கள்
நீங்கள் செய்யும் வேலையில் கவனமாக ஈடுபட்டு மேலதிகாரிகள் பாராட்டும் படி உழைப்பீர்கள் .வேலை யில் அதிக ஈடுபாடு நேர்த்தி பழகும் தன்மை இன்னும் சற்று உயர்திக்கொள்ளுங்கள் .
குரு 10 ம் இட பெயர்ச்சி
குருவானவர் உங்கள் ராசிக்கு 10 இடத்துக்கு பெயர்ச்சி ஆவது மிதுனம் ராசிக்கு வருவது உங்களை சுறுசுறுப்பாகும் .ஓடி ஓடி உழைப்பீர்கள் பகல் பூரா ஒரு வேலை மற்றும் parttime job என்று பணம் சம்பாரிப்பீர்கள் .இருந்தாலும் வேலை யில் சிலருக்கு வேலையில் இடம் மாற்றம் மற்றும் வேறு வேலை க்கு போவது வெளியூர் வெளிநாடு போவதற்கான சந்தர்ப்பங்களை தேடுவது போன்றவைகளில் வெற்றி கிடைக்கும்
தன வரவு பொருள் வரவு சிறப்பாக இருக்கும் .கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருகும் .வாக்குவாதம் குறையும் பெரியமனிதர்களின் ஆலோசனை கிடைக்கும் .குழந்தைகளினால் மனமகிழ்ச்சி ,குழந்தைகளின் உயர்வுக்காக செலவு செய்தல் ,மங்கள காரியங்கள் வீட்டில் நடைபெறுதல் ,நீண்ட நாட்களாக தள்ளிப்போன வரன்கள் கிஅடைக்கும் ,சிலருக்கு திடீர் திருமணம் நடைபெறும் .
குருவானவர் 4ம் இடத்தை பார்வையிடுவதால் வண்டி வாகன மண் மனை யோகம் கிடைக்கும் ,தாயாரின் உடல் நிலையில் இருந்து வந்த ஆரோக்கிய தொல்லை நீங்கும் மாற்று மருத்துவம் கிடைக்கும் ,ஆரோக்கிய மேம்பாடு உண்டாகும் .
குருவானவர் 6 இடத்தின் பார்வை .வேலை இழந்தவர்களுக்கு நல்ல அருமையான வேலை கிடைக்கும், எதிரிகளை வெல்லுவீர்கள் ,இந்த காலகட்டத்தில் மிகவும்அச்சுறுத்துக் கொண்டிருந்த நீண்ட நாள் கடன் பாக்கியை முடிப்பீர்கள் ஆனால் மீண்டு கடன் வாங்காமல் இருப்பது நல்லது
மாணவர்கள் முன்னேற்றம்
மாணவர்களை பொறுத்த வரை சிந்தனை திறன் மேம்படும் ஆ சிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆலோசனை உங்களுக்கு பக்க பலமாக இருக்கும் .படிக்கும் திறன் அதிகரிக்கும் ,இருந்தாலும் கவனச்சிதறலில் கவனம் தேவை
இந்த காலகட்டத்தில் சேமிக்கும் பழக்கம் உண்டாகும் ,mutualfund sharemarket இன்வெஸ்ட் என்பது அதற்குரிய வல்லுநர்களை கலந்து ஆலோசித்து செய்வது நல்லது .முடிந்தவரை நீண்டகால பிளான்களை மனதில் கொண்டு முதலீடு செயுங்கள்.
கன்னி ராசி காரர்கள் இந்த 2025 ம் ஆண்டு மனதில் உறுதிக்கொண்டிருந்த சில விஷயங்களுக்கு விடை தெரியும் ,தள்ளி போன நல்ல காரியம் இனிதே நடக்கும் ,
கன்னி ராசி பெண்களுக்கு 2025 ம் ஆண்டு
பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும் ,கோவில் , குளங்களுக்கு அதிகமாக பயணம் செய்வீர்கள் குலதெய்வ நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
இந்த 2025 வருடம் கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை சமூகம் சார்ந்த மற்றும் , உடல்நலம் சம்பந்தமான விஷயங்கள்ல கவனம் செலுத்துவீங்க. புது காதல் உறவு ஏற்படும், அது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஈடுபடுத்த நல்லது
ஆனாலும் இந்த 2025 ம் வருடம் வேலை, கல்வி, உடல்நலம், தொழில்னு எல்லாத்துலயும் வெற்றி கிடைக்கும். குடும்பம், உறவுகள்லயும் கவனம் செலுத்துவீங்க . தொழில்ல வெற்றி பெற பணத்தை யோசித்து முதலீடு பண்ணுவீங்க.
ஆரோக்கியம்
2025 வருடம் கன்னி ராசி காரர்கள் 60 வயதை கடந்தவர்களுக்கு மனதை லேசாக வைத்துருங்க சிக்கலான பிரச்னைகளை மனதுக்குள் எடுத்து செல்லாதீர்கள்.
ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவைப்படும் .வேண்டாத உணவு பழக்கவழக்கங்களை விட்டு விடுவது நல்லது ,தினமும் சூரிய நமஸ்காரம் யோகா நல்ல மந்திரங்களை உச்சரிப்பது நடை பயிற்சி உடலுக்கு ஒவ்வாமை ஏற்படாத உணவுகள் இவை அனைத்தும் உங்களின் ஆரோக்கியத்தில் தொந்தரவு ஏற்படாவண்ணம் காக்கும் .
பொதுவாக இந்த 2025 ம் வருடம் கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரைஅமோகமான ஆண்டாக நல்ல நல்ல வாய்ப்புகளை குடுக்கும் ஆண்டாக சிந்தனை தெளிவு ஆன்மீக நாட்டம் எடுத்த காரியத்தில் வெற்றி கிடக்கும் ஆண்டாக இருக்கும் என்பதில் மற்றம் இல்லை
இது பொதுவான பலன்கள் ,உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தை கொண்டு இந்த 2025 ம் வருடம் எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக 100 சதவீதம் அறியலாம் .
நன்றி
உங்கள் ஜோதிடர்
சேலம் எஸ் ஜெயக்குமார் MA