2025 புத்தாண்டு ராசி பலன் சிம்மம் ராசி / 2025 New Year Rasi Palan Simmam Rasi

2025 புத்தாண்டு ராசி பலன் சிம்மம் ராசி / 2025 New Year Rasi Palan Simmam Rasi

அனைவருக்கும் 2025 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 

இந்த பதிவில் சிம்ம ராசிக்காரர்களுக்கு 2025-ம் ஆண்டு பொது பலன்களைப் பார்ப்போம்  

இந்த 2025 ஆங்கில புத்தாண்டு சிம்ம ராசியினருக்கு பல சவால்களையும் சில நல்ல  பலன்களையும் தரும். இதுவரை பல இன்னல்களை சந்தித்து வந்த சிம்ம ராசிக்காரர்கள் புத்தாண்டின் முதல் பகுதியில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மே மாதம் வரை சவால்கள் அதிகமாக இருக்கும். ஆனால் மே மாதத்திற்குப் பிறகு, உங்கள் வாழ்க்கை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1. மூன்று முக்கிய பெயர்ச்சிகளினால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் 2025க்குள் அவற்றின் தாக்கம்

2025 ஆம் ஆண்டு மூன்று முக்கிய மாற்றங்களைக் காணும்:

  • சனியின் பெயர்ச்சி: மார்ச் மாதம்.
  • குரு பெயர்ச்சி : மே மாதம்.
  • ராகு-கேது பெயர்ச்சிகள்: மே.

இந்த மூன்று முக்கியப் பெயர்ச்சிகளும் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறது. ஆனால் முதல் பாதியில் சிம்ம ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். தெளிவான மனநிலையுடன் அணுகும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

2. குடும்ப வாழ்க்கை

ஏழாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கணவன்-மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், உடல்நலக் குறைபாடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதை சமாளிக்க நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.

3. நண்பர்கள் மற்றும் பணியிட சூழல் 

குரு 11 ம் இடத்தில  அமர்வதால் நண்பர்கள் மூலம் பல நன்மைகள் உண்டாகும். பணியிடத்தில் உயர் பதவிக்கு மாற வாய்ப்புகள் அமையும். அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும்.

4. உயர் கல்வி மற்றும் குழந்தைகள் நலன் 

படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். உயர்  படிப்புகளில் சேரத் தொடங்குவீர்கள். பிள்ளைகளுக்கு சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

5. அஷ்டம சனி மற்றும் அதன் விளைவுகள்

ஏப்ரல் முதல் அஷ்டம சனி உங்கள் ராசியை பாதிக்கத் தொடங்கும். அரசியல்வாதிகள் மற்றும் அரசுத் துறையில் பணிபுரிபவர்கள்மற்றும்  உயர் பதவிகளில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

6. ராகு-கேது பெயர்ச்சி

ஏழாம் வீட்டில் ராகு இருப்பதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படும். சட்டச் சிக்கலில் சிக்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இதைத் தவிர்க்க, நிதானமாகச் செயல்படுவது அவசியம்.

7. மோட்டார் வாகனம் மற்றும் ஆரோக்கியம்

2 வீலர் 4 வீலர் பயணம் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. பெண்கள், முதியோர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

8. ஆன்மீக பரிகாரங்கள் 

  • அனுமன் கவசம் தினமும் கேளுங்கள்.
  • முடிந்தால் வீட்டில் ருத்ர ஜப ஹோமம் செய்யவும்.
  • நாமக்கல் ஆஞ்சநேயரை வணங்குங்கள்.

9. வாழ்க்கை முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் 

மே மாதத்திற்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைக் காண்பீர்கள். புதிய வாய்ப்புகளும் முன்னேற்றங்களும் ஏற்படும். ஆனால் உங்கள் வளர்ச்சியைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதைத் தவிர்க்கவும். அமைதியாக இருப்பது நல்லது.இருக்கின்ற இடம் தெரியாமல் இருக்கனும்என்பதை போல 

10. நட்சத்திர  பலன்கள்

மகம் , பூரம் உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான யோகங்கள் இருக்கும். பண வரவு அதிகரிக்கும். இருப்பினும், தேவையற்ற செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

மகிழ்ச்சி ஏற்றம் 

2025 இல் சிம்ம ராசியின் முதல் பாதி சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும், மே மாதத்திற்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் அமைதியும் வெற்றியும் கிடைக்கும்.

நன்றி

உங்கள் ஜோதிடர் எஸ் ஜெயக்குமார் MA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *